எந்தெந்த நேரத்தில் எப்படி பூண்டு சாப்பிட்டால் ,என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா ?

 
garlic

பூண்டு பல்வேறு மருத்துவ குணமுடைய ஒரு பொருளாகும் .அதனால்தான் நம் முன்னோர்கள் இதை சமையலில் பயன்படுத்தி வந்தனர் .இந்த பூண்டை எந்த வடிவத்தில் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும் என்றும் ,எப்படி சாப்பிட்டால் தீமை என்றும் கூறுகிறோம் .

Health Benefits of Garlic
பூண்டை பலர் மாத்திரை வடிவத்தில் மருத்துவ சிகிச்சைக்காக எடுத்து கொள்கின்றனர் .ஆனால் அவற்றை பச்சையாக சாப்பிடுவதால் தான் அதிக நன்மை நம் உடலுக்கு கிடைக்கிறது .இதில் பாஸ்பரஸ் வாய்வு இருப்பதால அதிலிருந்து ஒரு கெட்ட நாற்றம் வருகிறது .அதனால் அதை சுட்டோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்  .
மேலும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடலில் எரிச்சல் ,புண் போன்றவை தோன்றலாம்  .அதனால் சாப்பிட்ட பிறகு பூண்டை எடுத்து கொள்ளலலாம் .மேலும் பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டால் பல நன்மை கிடைக்கும் .இதனை நேரடியாக சாப்பிடுவதை விட குழம்பு, ரசம் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.