பச்சையாக பூண்டை சாறு எடுத்து பருகினால் எந்த உறுப்பு பலப்படும் தெரியுமா ?

 
Health Benefits of Garlic Health Benefits of Garlic

பொதுவாக நாம் சமையலில் பயன்படுத்தும் பூண்டு நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது .ஏனெனில் பூண்டுக்குள் நிறைய மருத்துவ குணம் அடங்கியுள்ளது எனலாம் .இதை பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகிறது 
உதாரணமாக சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும்.
நசுக்கிய பூண்டு மற்றும் கிராம்பை நேரடியாக பாதிக்கப்பட்ட பற்களில் போடுங்கள்.பல் வலிக்கு நிவாரணம் அளிக்க இது உதவும். இது போல பூண்டின் மற்ற நன்மைகளை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1.இம்மியூனிட்டி பவர் வேண்டுவோர் பூண்டு உண்ணலாம் .பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. 
2.மருத்துவ குணமுள்ள  பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது அவர்க்ளின் பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
3.பூண்டில் அஜோன் என்ற ரசாயனம் உள்ளது .பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்கலை குணப்படுத்த பூண்டில் உள்ள இந்த அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது. 
4.சிலருக்கு நெஞ்சி வலி மற்றும் தனமித் துடிப்பு இருக்கும் .இது போன்ற இதய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும்.
5.ரத்த குழாயில் அடைப்பு உள்ளோருக்கு பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். 
6.மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பு குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.
7.சிலருக்கு கொலஸ்ட்ரால் இருக்கும் .பூண்டு இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை அதிகமாக உள்ளது. 
8.கேன்சர் வராமலிருக்க தினமும் பூண்டை உட்கொண்டு வரலாம் , பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு பூண்டு மூலம் குறையும்.
9.பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்பட்டு நம் ஆரோக்கியம் காக்கிறது  
10.நம் உடலில் அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை குணப்படுத்த பூண்டு பெரிதும் உதவுகிறது. 
11. மூட்டப்பூச்சி கடி உள்ளோருக்கு பூண்டு உதவும் .பச்சையாக பூண்டை சாறு எடுத்து பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நின்றுவிடும்.