பூண்டை பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த நம் உடலில் நேரும் அதிசயம்.
பொதுவாக நமக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு நம் வீட்டிலுள்ள பொருட்களால் குணப்படுத்த முடியும் .அந்த வகையில் மூலம் வாயு ,மற்றும் பல்வேறு உடல் தொல்லைகளுக்கு எப்படி செலவில்லாமல் கை வைத்தியம் செஞ்சி குணமாக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் அறியலாம்
1.சிலருக்கு தீப்புண் இருக்கும் .அதற்கு வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண் மட்டுமல்ல சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
2.சிலருக்கு மூல நோயிருக்கும் .அவர்கள் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
3.சிலருக்கு மூச்சு பிடிப்பு இருக்கும் ,அவர்கள் சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
4.சிலருக்கு உதடு வெடிப்பிருக்கும் .கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
5.சிலருக்கு வாயு தொல்லையாயிருக்கும்.அவர்கள் வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை ,ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
6.சில பால் கட்டி கொள்ளும் .பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
7.வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வர மறையாத தழும்பு கூட மறையும்
8.அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர புழுவெட்டு மறைந்து மயிர் முளைக்கும்.
9.சிலருக்கு நக சுற்று இருக்கும் .அவர்கள் வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
10.சிலருக்கு வாயு தொல்லையிருக்கும் .அவர்கள் வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.


