பழங்களால் நம் உடலின் எந்த பாகங்கள் பலப்படும் தெரியுமா ?

 
mango

பழங்கள் இயற்கை அன்னை நமக்கு கொடுத்த கொடை என்று கூறலாம் ,அதனால் அந்த பழங்களில் உள்ள வைட்டமின் சத்துக்களை நாம் பெற அதை ஜூஸாகவோ அல்லது சாலட் ஆகவோ சாப்பிடலாம் .சில பழங்களால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி பார்க்கலாம்

மாம்பழம்:

mango

 வைட்டமின் சி சத்துள்ள மாம்பழம் சாப்பிட்டால் அது நம் மலச்சிக்களை போக்குவதோடல்லாமல் உடல் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றும் குணங்களை கொண்டது .மேலும் இது நம் , கண்களுக்கும் நன்மையைத் தந்து , நம் உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து உடலில் நோய்கள் அண்டாமல் பாதுகாக்கும் .

பலாப்பழம்:

பலாப்பழத்தில்  புரோட்டீன், இரும்பு, கால்சியம் உள்ளது. இதில் உள்ள பயன்கள் மலச்சிக்களைப் போக்கும். இது நம் உடலுக்கு மாவுச்சத்து கொடுத்து நம்மை பாதுகாக்கும் .மேலும் நமது உடலுக்குமாவு சத்து தேவை என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று சுலைகளைச் சாப்பிட்டு வரலாம் .சுகர் பேஷண்டுகள் இதை தவிர்ப்பது நல்லது .

வாழைப்பழம்:

மலிவான விலையில் கிடைக்கும்  வாழைப்பழம் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.மேலும் இது மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பிரச்சனை இருந்தால் அதனையும் குணமாக்கும்.  செவ்வாழைப் பழத்தை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

ஆரஞ் பழம்

ஆரஞ் பழத்தில்   அதிக அளவு விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி2 ஆகியன உள்ளன. இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் அரை டம்ளர் ஆரஞ்சு  பழச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்

பெண்கள் மாதுளையை தாராளமாக சாப்பிடலாம் என்றுக் கூறுவர். வறட்டு இருமலைப் போக்கி பித்தம் தொடர்பான பிரச்சனைகளையும் போக்கும்.