ஆயிரக்கணக்கில் செலவாகும் ஃபுட் பாய்சனுக்கு செலவில்லாத வீட்டு வைத்தியம்..!

 
food

 
இந்த பாஸ்ட் புட் காலத்தில் பலருக்கு அடிக்கடி  ஃபுட் பாய்சன்  உண்டாகி வயிற்று கோளாறுகளை ஏற்படுத்திவிடுகிறது .இந்த கோளாறுக்கு வைத்தியரிடம் சென்றால் ஸ்கேன் ,ஈசிஜி என்று நம் பர்ஸை பதம் பார்த்து விடுவார்கள் .இதற்கு வீட்டுக்குள் செலவில்லாத சிகிச்சை முறையுள்ளது .இதை பின்பற்றி நாம் பயன்பெறலாம் 
.
ஃபுட் பாய்சன் குணமாக இஞ்சி


ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து கொண்டு ,அதை நசுக்கி வைத்து கொள்ளுங்கள் .
தண்ணீர் கொதிக்கும்போது தட்டி வைத்திருக்கும் இஞ்சியை அவற்றில் சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி தினமும் 2 வேளை குடித்து வந்தால்.இந்த புட் பாய்சன் பிரச்சினை தீரும் 

Ginger

ஃபுட் பாய்சன் குணமாக சீரகம்
 ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள் 
அந்த சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஃபுட் பாய்சன் என்ற பிரச்சினை பஞ்சாய் பறந்து போகும் , 

ஃபுட் பாய்சன் குணமாக துளசி
 
செரிமான பிரச்சனைக்கு துளசி  சரியான தீர்வு தருகிறது, எனவே துளசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை மிக்சியிலோ அல்லது அம்மியிலோ அரைத்து வைத்து கொள்ளுங்கள் .
பின்னர் அந்த துளசி பேஸ்டை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் புட் பாய்சன் பிரச்சினை காணாமல் போகும்