சுகர் பேஷண்டுகள் சும்மா கிடைச்சாலும் சாப்பிடக்கூடாத உணவுகள்

 
sugar

எந்த நோயாளியாக இருந்தாலும் உணவுக்கட்டுப்பாடு பாதி மாத்திரை மருந்து பாதி என்றால்தான் அந்த நோய் குணமாகும் .அதிலும் டைப் 1 மற்றும் டைப் 2சர்க்கரை நோயாளிகள் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்க கூடாது .அவர்கள் கடுமையாக டயட்டை பின்பற்றினால்தான் சுகரை கண்ட்ரோலில் வைக்க முடியும் ,குறிப்பாக கார்போ ஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சேர்ந்த உணவுகளை தவிர்த்தல் நலம் 

இப்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க எந்தெந்த உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து பார்ப்போம்.

1. வெள்ளை பிரெட் மற்றும் பாஸ்தா போன்ற உணவு வகைகளில் குறைந்த அளவே நார்ச்சத்தும், அதிகளவில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது.  இதை தவிர்க்க வேண்டும்

sugar

2. செயற்கையான சுவையூட்டப்பட்ட தயிர் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.  இதில் நிறைந்துள்ள அதிகமான சர்க்கரை உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.

3. செயற்கையான நிறமிகள் கலந்து சுவையூட்டப்பட்ட காபியை குடிப்பது விரைவில் ரத்த சர்க்கரையை உயர்த்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

4. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளில் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது, இதனை நீரிழிவு நோயாளிகளில் சாப்பிடாமல் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

5.சர்க்கரை சேர்க்கப்படும் பழச்சாறுகளை நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்