திடீர் காய்ச்சலுக்கு சில திடீர் வைத்தியங்கள்

 
fever

பொதுவாக காய்ச்சல் சிலருக்கு எப்ப வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது .அதுவும் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் திடீரென காய்ச்சல் அடிக்கும் .அப்போது இந்த காய்ச்சலுக்கு சில திடீர் வைத்திய முறைகளை பயன் படுத்தலாம் .இது பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்

1.திடீரென காய்ச்சல் அடிச்சால்,சிறிது சூரியகாந்தி விதைகளை அரைத்து கொள்வோம் .பின்னர் , அத்துடன் தேன் மற்றும் துளசியை கலந்து சாப்பிட ஜுரம் குறையும் .

2.மேலும் திடீர் காய்ச்சலுக்கு துளசி டீ தயாரித்து குடியுங்கள். . 

tulsi

3.திடீர் காய்ச்சலுக்கு புதினா மற்றும் இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க  விடுங்கள் ,

4.பின்னர் இவையிரண்டையும் 10 நிமிடம் கொதிக்க வைத்து கொள்ளுங்கள் ,

5.பின் அதை இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க காய்ச்சல் காணாமல் போகும்

6.அடுத்து வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து,எடுத்து கொள்வோம் 

7.பின்னர் அதை வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க காய்ச்சல் குறையும்

8. அளவுக்கு அதிகமாக காய்ச்சல் அடிக்கும் போது சந்தனம் நெற்றியில் தடவ திடீர் காய்ச்சல் குறையும்

9.அடுத்து திடீர் காய்ச்சலைக் குறைக்க 2-3 பூண்டு பற்களை தட்டி எடுத்து கொள்வோம் 

10.பின்னர் அவற்றை 1/4 கப் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள் , பின் அந்நீரைக் குடிக்க காய்ச்சல் மாயமாய் மறையும்