ஒல்லியா இருக்கிற உங்க குழந்தை கொழு கொழு ன்னுருக்க இந்த உணவுகளை அள்ளி அள்ளி கொடுங்க

 
child constipation tips

ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை இஷ்டத்துக்கு சாப்பிட அனுமதிப்பது...என தன் குழந்தையை குண்டாக்க அத்தனை பிரத்யேக முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள் பெற்றோர்கள். 
பிறந்த குழந்தை முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் குடித்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தைகள் ஆறு மாதத்தை எட்டியதும் சத்துமாவு கஞ்சி, இட்லி, சாதம் என படிப்படியாக உணவை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  
ஒரு வயதான குழந்தை 10 கிலோ எடை இருக்கலாம். 13 வயதில் 39 முதல் 42 கிலோ வரை உடல் எடை இருப்பது ஆரோக்கியமே என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

child eat

நம்முடைய குழந்தைகளுக்கு நாம் அவர்களுக்கு பிடித்த உணவுகளை மட்டும் கொடுக்காமல் அதனோடு அவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ள உணவுகளையும் வழங்க வேண்டும். முக்கியமா வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவித்து நார்ச்சத்து உள்ள உணவுகளை வழங்க வேண்டும்.மேலும் ஜங்க் பொருட்களை வழங்குவதை விடுத்து காய்கறிகள், பழங்கள், மற்றும் புரதம் போன்ற விட்டமின்கள் உள்ள உணவுகளை வழங்குவது நல்லது.

சரியான அளவு:

நாம் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான அளவு மட்டுமே அளிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக உணவுகளை குடுக்க கூடாது. இதனால் அவர்களுக்கு தேவையாக விரக்தியும் உணவின் மேல் உள்ள ஆசையும் போய்விடுகிறது. இதனால் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.

சாதம்:

நாம் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த உணவை ஸ்னாக்ஸ் ஆகா மட்டுமே குடுக்க வேண்டுமே தவிர அதனை மட்டுமே நாம் உணவாக கொடுக்க கூடாது. அவர்களுக்கு சரியான நேரத்தில் நாம் சாதம் அளிக்க வேண்டும்.ஏனெனில் அரிசியில் கலோரி மற்றும் ஸ்டார்ச் உள்ளது. இது நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் கடைகளிக் விற்கும் விட்டமின் பொருட்களை வாங்கி கொடுக்கிறோம். இதனை முளிமையாக தவிர்க்க வேண்டும். நம் வீட்டில் செய்யும் சாதத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. எனவே நாம் வீட்டு உணவு பொருட்களை பயன்படுத்துவது நம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கால்சியம்:

நம்முடைய குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த கால்சியம் மிகவும் அவசியம். இந்த கால்சியம் சத்து தான் நம்முடைய குழந்தைகளின் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை தருகிறது. எனவே நாம் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை குடுக்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் இயற்கையாகவே நாம் உணவு ஊட்டும் போது அதனை வெளியே தள்ள பார்க்கும். எனவே நாம் பொறுமையாக ஊட்ட சத்துக்கள் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.

காய்கறிகள்:

குழந்தைகள் அதிகமாக ஜங்க் உணவு பொருட்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதில் உள்ள ஆபத்துகளை புரிய வைத்து நாம் காய்கறிகளை கொடுக்க வேண்டும். ஏனெனில் நம் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் காய்கறிகளில் உள்ளது. வைட்டமின் டி, விட்டமின் ஏ சத்துக்கள் நம் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

வாழைப்பழம்:

நம்முடைய குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பதால் அவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின்களால் நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான எடை கிடைக்கும். மேலும் ஒரு முட்டை கொடுப்பதால் நம்முடைய குழந்தைகளுக்கு புரத சத்துக்கள் கிடைக்கின்றன.