கண் புரை ஏற்படுவதை தடுக்க உதவும் உணவுகள்

 
 eye

 

பொதுவாக நம்மக்கு வயதாகும்போது நம் உடல் உறுப்புகளுக்கும் வயது ஆகும் .இதனால் உடலின் பல பாகங்களில் பாதிப்பு உண்டாகும் .அதே போல் நமது கண்ணிலும் 45 வயதுக்கு மேல் புரை உண்டாகும் .இந்த கண் புரை நோய் சமயத்தில் குழந்தைகளுக்கும் ஏற்படும் .இதனால் கண்களுக்குள் உள்ள லென்ஸ் வழியாக ஒளியானது தெளிவாக ஊடுருவது தடுக்கப்படும் .இதனால் பார்வை மங்கலாக இருக்கும் .இதற்கு அதிக வயது ,சர்க்கரை நோய் ,ஸ்டெராய்டு மருந்து அதிகம் பயன்படுத்தல் மற்றும் நேரடி சூரிய வெளிச்சத்தில் அதிகம் இருப்பது போன்றவை காரணம் .இந்த கண்புரைக்கு சில வகை உணவுகளை தொடர்ந்து எடுத்தல் முன்கூட்டியே வராமல் தடுக்கலாம் .அந்த உணவு வகைகள் பற்றி பார்ப்போம் .

Digital Eye Strain

1.கண் புரையைத் தடுக்க வைட்டமின் சி உதவுகிறது,

2..நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், ஆரஞ்சு நிற பழங்கள், கீரைகள், தக்காளி போன்ற வைட்டமின் சி நிரைந்த இவைகளை எடுத்து கொண்டால் இந்த னாய் தாக்காது .

3.விட்டமின் ஈ உணவுகளும்  கண் புரை தோன்றுவதை தடுக்கிறது. முக்கியமான கொழுப்பு அமிலங்களுடன் இணைந்து கண்களைக் காக்கிறது.

4.பாதாம், சூரியகாந்தி விதை, செறிவூட்டப் பட்ட தானியங்கள், கடல் உணவுகள் விட்டமின் ஈ நிறைந்த உணவுகள் ஆகும் .