கண்ணாடி போடாமல் கண்ணை பாதுகாக்க இந்த காய் கறிகள் அவசியம்

 
eye

நமது உடலில் நாம் மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய உறுப்பு எதுவென்றால் அது கண் .இந்த கண்ணை நாம் செல்போன் ,கம்ப்யூட்டர் என்று பார்த்தும் ,இரவு நேரத்தில் குறைந்த வெளிச்சத்தில் தொலைக்காட்சி பார்த்தும் கெடுத்து கொள்கின்றோம் .இதனால் சிறு வயது குழந்தை கூட இப்போதெல்லாம் கண்ணாடி அணிந்து கொள்கின்றனர் .மேலும் மாலைக்கண் போன்ற நோயாலும் அவதி படுகின்றனர் .இப்படி நமக்கு பல வகையில் உபாயயோகமாக இருக்கும் கண்ணை பாதுகாக்க சில உணவுகள் உதவும் .அவை கிவி ,ஆரஞ்சு ,அவகேடா போன்ற பழங்கள் அதிகம் சாப்பிடுவோருக்கு கண் பார்வை குறைபாடு உண்டாகாது ,மேலும் மஞ்சள் ,முட்டை ,நட்ஸ் வகைகளை அதிகம் எடுத்து கொள்வோருக்கும் இந்த பிரச்சினை ஏற்படாது எனலாம் ,மேலும் கண்ணை பாதுகாக்க நாம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்

Digital Eye Strain

 1.கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

அதனால் கேரட்டை பொரியலாகவோ, பச்சையாகவோ, ஜூஸாகவோ, சாலட் ஆகவோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு வகையில் சாப்பிடுவது உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும்

2..

.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் கண் குறைபாடுகள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

3.பூண்டு, வெங்காயம் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் . இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் சரியாவதாக கூறப்படுகிறது