எட்டு வடிவ நடை பயிற்சியில் கிடைக்கும் எட்டு நன்மைகள்

 
walking

தினம் வாக்கிங் போகிறவர்கள் இனி எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும் மனதிற்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் .இதையறிந்து நம் சித்தர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ள சொன்னார்கள் .தினம் இந்த பயிற்சி நம் மூளைக்கும் சிறந்த ஆற்றலை கொடுக்கும் .இதையறிந்துதான் மேலை நாடுகளில் இதை இன்பினிட்டி வாக்கிங் என்ற பெயரில் இதை செய்து மீண்டும் நம் நாட்டுக்கே அனுப்பியுள்ளனர் .நம் உடலில் உள்ள பல வர்மப்புள்ளிகள் நம் உள்ளங்காலில் உள்ளது .கூழாங்கல்லில் வெறும் காலில் இப்படி நடக்கும்போது வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு ஆரோக்கியம் மேம்படுகிறது

eight walk

சுவாச பிரச்சினையுள்ளவர்கள் தினமும் குறைந்தது 15 நிமிடம் எட்டு வடிவில் சுற்றினால் மூக்கில் இருக்கும் இரண்டு துவாரங்களுக்குள் நல்ல சுவாசம் கிடைக்கும். மேலும்  மூளை மற்றும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் புத்துணர்ச்சி பெறுவதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நரம்பு மண்டலங்கள் வலுவாகி மன அழுத்தத்தை குறைக்கிறது. உடல் உறுப்புகள் அத்தனையும் சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கிறது. இதனால் மன அமைதி, ஆரோக்கியம், ஆயுள் அதிகரித்து நம் ஆரோக்கியம் மேம்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் .

மேலும்  தீராத தலைவலி, தலை சுற்றல் , மூக்கடைப்பு, மார்புச்சளி , மார்புவலி , கண் பார்வை குறைபாடு, கேட்கும் திறன் குறைவது,. குதிகால் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஆகிய வலிகள் நீங்க இந்த பயிற்சி நல்ல ஒரு பலனைக் கொடுக்கும்