எட்டுக்கும் மேற்பட்ட நோய்களை விரட்டும் எட்டு வடிவ வாக்கிங்

 
walking

பொதுவாக நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் ஆரோக்கியமான  8 வடிவ நடை பயிற்சி செய்யலாம், உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ தெற்கு வடக்காக இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8-க்கு 16 அடி அளவில் கோடு இட்டு கொள்ளவும் . அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொண்டு தினம் எட்டு வடிவ நடை பயிற்சி மேகொண்டு பின் வரும் பலன்களை பெறலாம் அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

eight walk

1.தினம் காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பிக்கலாம்,

2.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை ஆண்கள் வலது கை பக்கம், பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்க வேண்டும்.

3.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்க வேண்டும்.

4.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை ,மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யவேண்டும்.

5.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியின் பலன்கள்:சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெரும்.

 6.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியின் மூலம் மூட்டு வலி பிரச்சனை குறையும்.

7.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியின் மூலம் தொடை பகுதி பலம் பெரும்.

8.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியின் மூலம் ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறைபாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்பபை குறைபாடு ஆகியவை நீங்கும்.

9.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியின் மூலம் வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்.

10.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியின்  மூலம் இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்.

11.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியின் மூலம் தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது.