ஓவரா முட்டை சாப்பிடுபவர்களை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள்

 
egg

முட்டையை அளவோடு சாப்பிடாமல் அதிகமாக எடுத்து கொண்டால் அவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது .

egg

மலச்சிக்கல் பிரச்சினை &கொலஸ்ட்ரால் பிரச்சினை

அதிக முட்டைகளை சாப்பிடுவது சில நேரத்தில் மல சிக்கலையும் ஏற்படுத்தி விடும் .மேலும் முட்டையின் மஞ்சள் கரு கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி ஆபத்தை நம் உடலுக்கு உண்டாக்கும்

மேலும் ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் முட்டைகளை குறைவாக சாப்பிட வேண்டும்.

எடை அதிகரிப்பு&சுகர் ஆபத்து

முட்டையில் கொழுப்பு உள்ளது. அதனால் அதை அதிகமாக எடுத்து கொள்ளும்போது உடல் எடை அதிகரிக்க தொடங்கும் .இதனால் உடல் பல பாதிப்புகளை சந்திக்கும்

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. முட்டை சாப்பிடுவதால், நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, நம் உடலில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கத் தொடங்குகிறது. சர்க்கரை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒரு நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்.எனவே முட்டையை குறைவாக ,சாப்பிட்டு வளமாக வாழ்வோம்.