யாரெல்லாம் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட கூடாது தெரியுமா ?

 
egg egg

பொதுவாக முட்டை சாப்பிடுவது நம் உடலுக்கு நலம் சேர்க்கும் .கொரானா காலத்தில் கூட உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தி கிடைக்க தினம் முட்டை சாப்பிட்டு வந்தனர் .இந்த முட்டை மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

egg

1.பொதுவாக முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாகுலர் சிதைவு, கண்புரை, ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

2.பொதுவாக முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய அதாவது 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.

3.இயற்கையாகவே உடலில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளல் ஆபத்து என்று வல்லுநர்கள் கூருகின்றனர் .

4.பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் தினமும் அவித்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்வது நலம் சேர்க்கும்

5.மேலும் உடல்நிலை பாதிப்புகள் இல்லாமல் இருப்பவர்கள் தினமும் ஒரு அவித்த முட்டையை சாப்பிட்டு வரலாம்  .

6.வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அவித்த முட்டை கொடுக்க, அவர்களின் செல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

7.அவித்த முட்டையில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால் இது நம்முடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

8.முட்டை புரதங்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம், செலினியம்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் முக்கியமான தாதுக்கள் உள்ளன .

9.முட்டையில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

10. முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்களுடைய கண்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது