சர்க்கரை நோயாளிகள் முட்டையை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 
sugar

பொதுவாக சர்க்கரை நோய் அதிக கொழுப்பு உணவு சாப்பிடுவோருக்கும் ,உடல் பருமன் உள்ளோருக்கும் ,குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தாலோ அவர்களுக்கு வர வாய்ப்புள்ளது .இந்த சுகர் பேஷண்டுகளுக்கு முட்டை உணவு நல்லதா ?கெட்டதா ?என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் 

egg

1.ஒரு முட்டையில் நமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளது

2.ஒரு முட்டையில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி உள்ளன

3. மேலும் ஒரு முட்டையில் இரத்த சக்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போஹைட்ரேட்  குறைவாக இருக்கிறது.

4.முட்டையில் இருக்கும் புரதம் இரத்தசக்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கும்.

5.நிறைய கலோரிகள் முட்டையில் உள்ளது .முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது, அதில் 15 வெள்ளையிலும், 60 கலோரிகள் மஞ்சள் கருவிலும் இருக்கிறது.

6.சில சுகர் பேஷண்டுகள் நிறைய முட்டை சாப்பிடுவர் .இப்படி இருக்கும் முட்டையை சக்கரை நோயாளிகள்  வாரத்திற்கு 3 அல்லது 4 முட்டை சாப்பிடலாம்.

7.சிலர் முட்டையின் வெள்ளையை மட்டும் சாப்பிடுவர் .முட்டையின்  வெள்ளைப் பகுதியை மற்றும் சாப்பிடுபவர்கள் ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முட்டைகள் சாப்பிடலாம்.

8.மேலும், முட்டையில் 184 கிராம் கொலஸ்ட்ரோலும் 5 கிராம் நிறைவில்லா கொழும்பும் இருப்பதால் சக்கரை நோயாளிகள் முட்டையை சாப்பிடாமல் தவிர்த்தல் நலம் சேர்க்கும்