காரி துப்பும் எச்சில் ,நம் உடலுக்கு வாரி வழங்கும் நன்மைகள்

 
echil

உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உணவை எளிதாக உட்கொள்ள உதவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச்சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொல்வர்.
உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுவது மட்டும் அல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. உமிழ்நீர் உணவுத் துகள்களைக் கரைப்பதால் உணவின் சுவை உணரப்படுகின்றது. உடலில் நீரின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. உடலில் நீரின் அளவு குறைந்தால், நா வரண்டு போவது, உமிழ்நீர் குறைவதாலேயே. இதலால் நீர் அருந்த குறிப்பு தருகின்றது. உமிழ்நீர் பற்களின் நலம் கெடாமலும், உணவுத்துணுக்குகள் வாயுள் கிடந்து பிற நுண்ணுயிர்களால் நோய் உண்டாக்காமல் வாயில் இருந்து நீக்கியும் உதவுகின்றது. உமிழ்நீரில் உள்ள அமிலேசு என்னும் நொதியம் மாவுப்பொருளான கார்போஹைடிரேட்டுகளை வேதியியல் முறையில் பிரித்து செரிப்பதற்கு எளிமையான பொருளாக மாற்ற உதவுகின்றது.
உமிழ்நீரில் உள்ள புரதங்களால் நோய் கிருமிகளை அழிக்க முடியும். பறவைக் காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களில் இருந்து முதியவர்களை காப்பாற்றுவதில் உமிழ்நீரில் உள்ள புரதங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

அதிகமா எச்சில் வந்துகிட்டே இருக்கா? தண்ணிய வச்சே எப்படி அத  கட்டுப்படுத்தலாம்? | What Causes Too Much Saliva In The Mouth? - Tamil  BoldSky

உமிழ்நீர் என்பது வாயில் உற்பத்தியாகும் திரவமாகும். உமிழ்நீர் கிருமி நாசினியாக செயல்படுகிறது. உமிழ்நீரில் உள்ள நொதிகள் உணவு செரிமானத்திற்கு உதவுகின்றன. உமிழ்நீர் ஒரு நபரை பல நோய்களிலிருந்து பாதுகாக்கவும் செயல்படுகிறது.

 உமிழ்நீரைப் பயன்படுத்துவது கண் நோய்கள், தோல் தொடர்பான நோய்கள் மற்றும் பல பல் பிரச்சனைகளில் இருந்து நன்மை பயக்கும். ஆயுர்வேதத்திலும் உமிழ்நீரின் பல நன்மைகள் கூறப்பட்டுள்ளன. அதே நேரத்தில், காலையில் பழைய உமிழ்நீர் இன்னும் நன்மை பயக்கும். தூங்கி எழுந்த உடனே காலை வேளையில் தேங்கும் உமிழ்நீர் குறித்த நன்மைகள் பற்றி  பேசலாம்.

சரும பிரச்சனைகளுக்கு நன்மை தரும்

காலையில் தேங்கிய உமிழ்நீரானது காயங்கள் மற்றும் பருக்கள் போன்றவற்றை நீக்கும். முகப்பரு பிரச்சனை இருந்தால், பழைய உமிழ்நீரை முகத்தில் தடவினால் இந்தப் பிரச்சனை தீரும். உடலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் குணமான பிறகு இருக்கும் தழும்புகளை அகற்றவும் உமிழ்நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட காலையில் தேங்கிய உமிழ்நீர் மிகவும் நன்மை பயக்கும். இதற்கு, காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் வராது.

கண்களுக்கு

உங்கள் கண்களுக்குக் கீழே கரு வளையங்கள் இருந்தால், அவற்றின் மீது உமிழ்நீரைப் பூசுவது பல நன்மைகளைத் தரும். காலையில், வாயின் உமிழ்நீரைக் கொண்டு கண்களைச் சுற்றி மெதுவாகத் தேய்க்கவும். கருவளையங்கள் சில நாட்களில் மறைந்துவிடும். மேலும், காஜல் பயன்படுத்துவது போல  காலையில் உமிழ்நீரை கண்களில் தடவுவது, கண்பார்வை அதிகரிக்கிறது.