பொங்கலுக்கு கரும்பு சாப்பிட்டதும் இந்த தப்பை செஞ்சா ,உங்களை வச்சி செஞ்சிடும் -உஷார்

 
sugacane

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. 'சர்க்கரை' என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. புறநானூற்றின் 99 ஆவது பாடல் அதியமான் என்ற சேரமன்னன் கரும்பைத் தமிழகத்தில் அறிமுகபடுத்தினான் என்கிறது

புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு. மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.((க்யூபா)) அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால், 'உலகின் சர்க்கரை கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. 

pongal package

கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால்,வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது. "கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை"என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே,இந்த சிறு விழிப்புணர்வுடன் நாம் பொங்கலைக் கொண்டாடுவோம்.