சுக்குடன், சின்ன வெங்காயத்தையும் அரைத்துச் சாப்பிட்டால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

பொதுவாக சுக்கு நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .இந்த சுக்கை எந்த பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும் என்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

sukku

1.சிலருக்கு நீர் கோவை இருக்கும் .சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை அடியோடு நீங்கிவிடும்.

2.மேற்கூறியபடி சுக்கை தலையில் தேய்த்தால் ஈரு , பேன் ஒழிந்துவிடும்.

3. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவந்தால், பல்வலி ,. ஈறுகள் நன்றாக பலம் பெற்று . வாய்துர்நாற்றம் விலகிவிடும்.

4.கொஞ்சம்  சுக்குடன், சின்ன வெங்காயத்தையும் அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் உடனடியாக அழியும்.

5.சுக்குடன், கொத்தமல்லியை சிறிதாக இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

6.சுக்கு, ஐந்து மிளகு அதோடு ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் அடியோடு முறிந்து விடும்.

7.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி உடனே குணமாகும் 

8.சிறிது சுக்குடன்,ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை அடியோடு ஒழியும்

9. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

10.தயிர்சாதத்துடன், சிறிதுசுக்கை பொடியாக்கி சாப்பிட்டால், தீராத வயிற்றுப்புண் உடனே ஆறும்.

11.சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குணமாகும் .

12.சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல்  குணமாகி விடும்.