உடலுக்கு பலம் கிடைக்க எந்த பழம் சாப்பிடணும் தெரியுமா ?

 
fruits eating tips

பொதுவாக உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. இந்த  பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

நமக்கு ஆரோக்கியம் தரும் இந்த உலர் பழங்களின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

dry grapes

1.பொதுவாக உலர் பழங்களில்  கலோரிகள் அதிகம் என்பதால் நமக்கு ஆரோக்கியம் தரும்

2.மேலும் உலர் பழத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன.

3.உலர் பழங்கள் உண்பது வெகு எளிதில் செரிமானமாகி ஆரோக்கியம் கொடுப்பவை .

4.உலர் பழங்கள் உண்பது ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ஆரோக்கியம் கொடுப்பவை .

5.உடல் பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால், விரைவில் பலம் பெறலாம் .

6.உலர் பழங்களில் உள்ள இனிப்பு , நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

7.உலர் பழங்களை உண்பதை பழக்கமாகக் கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும்.

8.உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை காக்கக்கூடியவை.

9.உலர் பழங்கள் உண்பது மலச்சிக்கலை போக்க வல்லது.

10.உலர் பழங்கள் உண்பது நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது.

11.உலர் பழங்களில் உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன.