மஞ்சள் தூள் மற்றும் ஓமத்தை தேனுடன் சேர்த்து குடிச்சா எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
yellow milk benefits

பொதுவாக குளிர்காலத்தில் வறட்டு இருமல் நம்மை பாடாய் படுத்தியெடுக்கும் .இதற்கு சளி காரணமல்ல .வைரஸ் தொற்றுகளால் இந்த இருமல் தொல்லை கொடுக்கிறது .இந்த இருமலால் இரவில் தூங்க முடியாமல் பலர் அவதி படுவதுண்டு .இன்னும் சிலருக்கு  சில வார்த்தை கூட பேச முடியாமல் இருமல் வந்து கொண்டேயிருக்கும் .இதனால் சிலர் மூச்சு விடவே சிரமப்படுவதுண்டு .இந்த இருமல் காசநோய் ,அல்லது நிமோனியா போன்ற நோய்களால் கூட உண்டாக வாய்ப்புண்டு .இதனால் எரிச்சலுணர்வு ,சோர்வு போன்றவை ஏற்படும் .இந்த இருமல் நிற்க சில வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம்

home remedy for cough

வறட்டு இருமல் நிற்க ,1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஓமத்தை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள் ., பின்னர் அதில் தேன் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வாருங்கள் .இப்படி செய்தால் , வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

2.ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு நாள் முழுவதும் மென்று கொண்டேயிருந்தால் இந்த வறட்டு இருமல் நிற்க வாய்ப்புண்டு

3.மேலும் லெமனுடன் தேன் கலந்து குடிப்பது இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்

4.கருப்பு மிளகை தேனில் குழைத்து சாப்பிட்டாலும் இருமல் நிற்கும்