பழம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிச்சா என்னாகும் தெரியுமா ?

 
water

 

பொதுவாக பழங்களும் ,காய்கறிகளும் இயற்கை நமக்கு கொடையாக கொடுத்த வரங்கள் .இந்த பழங்களை நாம் முறையாக சாப்பிட வேண்டும் .இல்லையெனில் அவற்றின் பயன்கள் நமக்கு கிடைக்காது .பழத்தை சரியான நேரத்திலும் ,சரியான விகிதத்திலும் சாப்பிட தவறினால் அது எதிர் வினையாற்றி நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடும் .எனவே எப்போது பழங்களை எப்படி சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது என்று குறிப்பிட்டுள்ளோம் .படித்து பயன் பெறுங்கள்

Fruit

 

1.சிலர் பழங்களை சாதம் சாப்பிடும்போது சாப்பிடுவர் .இப்படி மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாதீங்க. இது உடலில் நச்சுக்களை உருவாக்கும்.

2. பழங்களை மற்ற  உணவுகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருந்து .ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கி நம் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும்

3.சிலர் பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிடுவதுண்டு . இப்படி இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

4., மேலும் இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவோருக்கு அது  அசிடிட்டியை உண்டாக்கும்.

5.சிலர் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரை குடிப்பதுவழக்கம் ,இப்படி குடிப்பது  மிகவும் தவறு.

6.பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, ,வயிற்றுப் போக்கு  போன்ற தீவிர பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.

7.பலர் ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.

 8. தோலுடன் சாப்பிடக்கூடிய  பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றநோய்கள் உண்டாவதை தடுக்கலாம்