அடிக்கடி அசைவ சாப்பிட்டால் வரும் அஜீரண பிரச்சினைக்கு உதவும் அன்னப்பொடி -தயாரிக்கும் முறை

 
stomach

அசைவ உணவை சாப்பிடுவதால் பக்கவிளைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

அதாவது இறைச்சி உணவு வகைகளை அன்றாடம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சிவப்பு இறைச்சி போன்ற உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும். சிவப்பு இறைச்சியில் இருக்கும் கொழுப்பு தமனிகளை அடைத்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது


அசைவ உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

ஏனெனில் அசைவ உணவு வகைகளில் கலந்திருக்கும் அதிகமான புரதத்தை ஜீரணிப்பது செரிமான அமைப்புக்கு கடினமான பணியாகும்.

தொடர்ச்சியான அசைவ உணவுப் பழக்கம் ஆயுட்காலத்தை குறைத்துவிடும். உடல் பருமன் பிரச்சினையையும் உருவாக்கும்.

Non-vegetarian foods are essential for good health!

அசைவ உணவை சாப்பிடுவதால்  அஜீரண பிரச்சனைகளுக்கு   ஒரு சிறந்த தீர்வு அன்னப்பொடி ஆகும்.  இதை செய்வது மிகவும் எளிது,  இதை நாம் வீட்டிலேயே தயார் செய்து வைத்து  தேவையான பொழுது பயன்படுத்தி கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

மிளகு -50 கிராம்.

திப்பிலி -50 கிராம்.

சுக்கு - 50 கிராம்.

சீரகம் - 50 கிராம்.

பெருங்காயம் - 25 கிராம்.

கறிவேப்பிலை ( உலர்ந்தது) - 50 கிராம்.

கல் உப்பு - 25 கிராம்.

செய்முறை

அன்னப்பொடி தயாரிக்க மிளகை  தனியாக வறுத்து கொள்ளுங்கள். சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளுங்கள்.

சுக்கு, திப்பிலி, பெருங்காயம் மற்றும் கல்உப்பு  சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஆற வைத்து அரைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளுங்கள்.

 

சாதத்துடன் ஒரு ஸ்பூன் அன்னப்பொடியை சிறிது நல்லெண்ணை கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு மற்றும் வாயு தொந்தரவு போன்ற வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

அஜீரணம் ஏற்படாமல் தவிர்க்க

சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் காலை உணவு 9 மணிக்குள்,மதிய உணவை 12-  2 மணிக்குள், இரவு உணவு 8 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.

வயிறு நிறைய சாப்பிட கூடாது.

உணவை  நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.அவசரமாக சாப்பிட கூடாது.

சாப்பிட்டு  விட்டு உடனே தூங்க கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து தூங்க வேண்டும். இதனால் உணவு செரிமானம் எளிதாக நடக்கும்.