அஜீரண பிரச்சினைக்கு அரு மருந்தாக அமையும் இந்த மலிவான பானம்

 
stomach

பொதுவாக கோடை வெயிலின் போது மோர் குடித்தால் உடல் குளிர்ச்சியாக்கும் .

கொஞ்சம் கல் உப்பு, கருப்புமிளகு, சீரகம் கலந்து மோரை குடித்தால் , உங்கள் உடலில் அமிலத்தன்மை உடனே மறையும். ஆகவே தான் ஆண்களும் பெண்களும் மதியம் மோர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் இந்த மோர் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

.

1.மோர் நம் உடலுக்கு உடலுக்கு குளிர்ச்சியையும், ஆற்றலையும் தருகிறது .

buttermilk

2.மோர் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் .

3.பொதுவாக வெயில் காலத்தில் நம்முடைய உடலில் தண்ணீர் பற்றாக்குறைஉண்டாகும் .இதை  போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும்.

4.ஆரோக்கியம் தரும் மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையல்ல.

5.உப்பு, சர்க்கரை, புதினா ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம் ஆகிய நோய்கள் குணமாகும்

6.கோடை வெப்பத்தால் பல நேரங்களில் நம்முடைய கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்படும்.

7.மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும்.

8.இதனால் கண்களில் இருக்கும் எரியும் உணர்வு நீங்கும். கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும்.

9.அதே போல் சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் மோர் தடவவும். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

10.அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை என்பது இப்போது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மோர் அசிடிட்டிக்கு அரும்மருந்தாக செயல்பட்டு நம் ஆரோக்கியம் காக்கும்