கோடையில் முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
kidney

பொதுவாக நம் உடலில் கிட்னி மிக முக்கியமான உறுப்பு .இது செயலிழந்து விட்டால் முதலில் டயாலிசிஸ் செய்வார்கள் .பின்னர் கிட்னி மாற்று சிகிச்சை செய்யப்படும் .நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மையை இழப்பது ஆகும் .இந்த கிட்னியைப் பாதுகாக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம் 

1.பொதுவாக கோடைக்காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும். அப்போது உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும்  
2.மேலும் முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் காயம் ஏற்பட்டு ஆரோக்கிய குறைவு உண்டாகும் 
3.கிட்னி ஆரோக்கியமாயிருக்க ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 12 தம்ளர் நீர் பருகுவது அவசியம். 
4.கிட்னி ஆரோக்கியமாயிருக்க  நீர்ச்சத்து அதிகமான வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். 
5. மேலும் அளவுக்கு அதிகமான உப்பை நாம் சேர்த்தால் இரத்த அழுத்தம் அதிகரித்து கிட்னியை பாதிக்கும் க்கும். 
6.இப்படி உயர் இரத்த அழுத்தம் இருப்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். 
7.சாதாரணமாக தினமும் 4 முதல் 5 கிராம் என்ற அளவுக்கு உப்பை குறைத்துக்கொள்வது நலம். 
8.தீவிர சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் இருப்போர் அதிக உப்பு சேர்த்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகி கிட்னியை பாதிக்கும் . 
9.  சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கும் நார்சத்து  உதவி செய்கிறது. 
10.கிட்னியை காக்க  பீன்ஸ்,கொண்டை கடலை, பெர்ரி வகை பழங்கள், தர்பூசணி வகை பழங்கள் சாப்பிடுவது பயன் அளிக்கும்..