ஆரோக்கியமா குழந்தை வளரணுமா ? அதுக்கு தயிரை இப்படி தரணும்

 
curd

தயிரில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் நீர் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த தயிரில் கார்போஹைட்ரேட், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதனால் இது  வளரும் குழந்தைகளுக்கு மிக சிறந்த  ஆரோக்கியமான உணவாக இருக்கும் என்று ஆயுர் வேதம் மற்றும் சித்த வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளதால் தயிரை தயக்கமின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை உணவாக கொடுக்கலாம

curd

குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படாமல்  குழந்தைகளுக்கு  நோயெதிர்ப்பு சக்தியை  வழங்குகிறது, மேலும்  தயிர் இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுவதால் அவர்களுக்கு இம்மியூனிட்டியை பலமடங்கு உயர்த்துகிறது

தயிரின் முழு பலனையும் பெற விரும்புபவர்கள் வீட்டிலே தயாரித்த தயிரை பயன்படுத்துவது நல்லது. தயிரில் வளமான நல்ல பாக்டீரியாக்கள்  அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.மேலும் லூஸ் மோஷன் நேரத்தில் தயிர் சாப்பிட்டால் அதை சட்டுன்னு நிறுத்தும் சக்தி தயிரில் நிறைந்து காணப்படுகிறது