"இரவு முழுவதும் இருமல் தொல்லை கொடுக்குதே "ன்னு இருமிகிட்டே இருக்கிறவங்களுக்கு உதவும் மருந்து தயாரிக்கும் முறை

 
home remedy for cough

தற்காலங்களில் உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வரும் போது, நமது மக்கள் ரசாயனங்கள் மிகுந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”. 
அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

இனிப்புச் சுவையுள்ள இந்த அதிமதுரம்… ஏராளமான நோய், குறைபாடுகளை சரி செய்யக்கூடியது.

சூட்டினால் வரும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து இளம் வறுப்பாக வறுத்துப் பொடியாக்கி, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பிரச்னை சரியாகும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும்.

அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்றுவேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

இதேபோல் அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் இளநரை நீங்குவதோடு தலைமுடி மினுமினுப்பாக மாறும்.

மேலும், தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். அதிமதுரத்தை இடித்து, எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்துச் சலித்து இரவு படுக்கும்போது, டீஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் சரியாகும்.

போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஒரு கிராம் அளவு அதிமதுரச் சூரணத்தை பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.