டேய் மச்சான் ,எந்நேரமும் இருமிகிட்டேயிருந்த பக்கத்து வீட்டு பாட்டி வறட்டு இருமலை எப்படி விரட்டினேன் தெரியுமா?

 
cough

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல்  நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

Here are the natural medical ways of immediate diagnosis of cough ...

மஞ்சள்  பால்:

இது நம்முடைய பண்டைய கால இயற்கை முறைகளில் ஒன்று. அன்றைய காலத்தில் இருந்து இந்த வறட்டு இருமலுக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதற்க்கு பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொது நாம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய தொண்டை புண் குணமாகும். மேலும் இருமல் வருவதை தடுக்கும்.

துளசி:

நம்முடைய வறட்டு இருமலுக்கு மிகவும் எளிதான ஒரு நிவாரணம் என்றால் அது துளசி தான். துளசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியாக்கள் உள்ளது.எனவே தினமும் இந்த துளசியை சிறிது சாப்பிட்டு வந்தால் நம்முடைய இருமல் சரியாகும். மேலும் இதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தாலும் நமக்கு தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும்.

தேன்:

தேனில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய வறட்டு இருமலுக்கு மிக சிறந்த நிவாரணமாக இருக்கும். மேலும் இது நம்முடைய தொண்டைக்கு நல்ல இதமான மருந்தாகவும் இருக்கும். இதற்க்கு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை சூடேற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொது குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு வறட்டு இருமல் சரியாகும்.

மசாலா டீ:

சிறிதளவு தண்ணீரில் சோம்பு மற்றும் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், பின் அதில் சுவைக்காக தேன் கலந்து அந்த நீரை குடித்து வந்தால் நம்முடைய தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும். இல்லையெனில் கொதிக்கும் நீரில் சிறிது இன்ஜி போட்டு அதனை வடிகட்டி குடித்தாலும் நம் இருமல் சரியாகும்.

வெங்காயம்:

வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. இதற்க்கு நம்முடைய இருமலை நீக்கும் சக்தி உள்ளது. எனவே சிறிது வெங்காய சாறை எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் நம்முடைய இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.தினமும் 3 வேலை இந்த கலவையை குடிக்க வேண்டும்.

மருதாணி இலை:

சிறிது மருதாணி இலையை எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரை தினமும் 2 வேளை குடித்து வந்தால் நம்முடைய இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.

பாதாம்:

சிறிதளவு பாதாமை ஊற வைத்து அதன் தோலை நீக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் வெண்ணை மற்றும் தேனை கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை ஒரு நாளுக்கு 2 வேலை என குடித்து வந்தால் நம்முடைய வறட்டு இருமல் நீங்கும்.

மேலும் சில வழிமுறைகள்:

இரவு தூங்கும் முன் சிறிது ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு கொண்டு தூங்கினால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்தால் நம் வறட்டு இருமல் நீங்கும்.

இஞ்சி பேஸ்டுடன் மிளகு தூள் கலந்து அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.