விடாத இருமல் உள்ளோரை விடாமல் துரத்தும் நோய்கள்

பொதுவாக சிலருக்கு இருமலும் சளியும் வந்துவிட்டால் அது சில நாட்களில் தானாகவே சரியாகி விடும் .ஆனால் சிலருக்கு பல நாட்கள் தொடர்ந்து இருமல் இருந்து கொண்டேயிருக்கும் .அப்படிப்பட்ட
நாள்பட்ட இருமலுக்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை பற்றி பார்ப்போம்.
1.கொரானா தொற்று நுரையீரல் அழற்சி மற்றும் வறட்டு இருமலுக்கும் வழிவகுக்கும்.
2.சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும் .புகைப்பிடிப்பவரின் இருமல், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்க்கு (சிஓபிடி) வழி செய்யும்
3.ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய்களுக்கு இடம் கொடுக்கும்
4.சிலருக்கு நிமோனியா நோய் இருக்கும் .இந்த நோய் ஒரு உலர் இருமல் அல்லது பச்சை, மஞ்சள் அல்லது இரத்தம் தோய்ந்த சளியுடன் இருமலை ஏற்படுத்தலாம்.
5.மேலும் நிமோனியா இருக்கும்போது இருமலுடன், காய்ச்சல், வியர்த்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் இருக்கும்
6.அடுத்து உங்கள் நுரையீரலை பாதிக்கும் ஒரு தீவிர தொற்று நோய் காசநோயாகும்.
7.பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால், அது காசநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது .
8.சிலருக்கு சளி மற்றும் இருமலின்போது இரத்தம் வெளியேறும் . அது காசநோயால் ஏற்படலாம்.
9.சிலருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கும் .இந்த நோய் இருமலுக்கு வழிவகுக்கும் .
10.நுரையீரல் புற்றுநோய் இருந்தால் உங்களுக்கு தொடர் இருமல் இருக்கும் .மேலும் அது காலப்போக்கில் இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது