வீட்டில் இருந்தபடியே, இருமலை சரி செய்வது எப்படி?.

 
cold

பொதுவாக இருமல் சளி என்று வந்து விட்டால் நாம் உடனே ஒரு ஆங்கில வைத்தியரிடம் சென்று மாத்திரை ,மருந்து சாப்பிடுவோம் ,ஆனால் ஒரு சில வீட்டு வைத்தியம் இதற்கு உண்டு ,இதை நாம் வீட்டிலேயே முயற்சித்து பார்க்கலாம் ,அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.கற்பூரவல்லி இலைகள் ஐந்து எடுத்துக்கொள்ளவும் .அதனுடன் ஒரு 200மில்லி தண்ணீர் எடுத்துக்கொள்வோம்

home remedy for cough

2.அடுத்து ஒரு வெற்றிலையை எடுத்து கொள்வோம் ,அதனுடன் இஞ்சி கொஞ்சம் எடுத்து கொள்வோம் 

3.அடுத்து சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்வோம் .அதனுடன் மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து கொள்வோம்

4.அடுத்து மஞ்சள் ஒரு சிட்டிகை எடுத்து கொள்வோம் .மேற்சொன்ன பொருட்களை வைத்து எப்படி இருமல் கஷாயம் தயாரிக்கலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம் 

5.முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 200மிலி ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

6.பின்னர் கொதித்து வரும் தண்ணீரில் கற்பூரவல்லி, வெற்றிலை, இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்

7.பின்னர் அதனுடன் சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

8.அதன் பின் வடிக்கட்டி தினமும் குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் குணமாகி விடும் .