வெறும் வயிற்றில் குளிர் பானம் குடிச்சா என்னாகும் தெரியுமா ?

 
cool drinks

காலையில் எழுந்ததும் சில ஊட்டச்சத்துள்ள பானங்களை எடுத்து கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் .நம் குடல் காலையில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் மிருதுவாக இருக்கும் .இந்த நேரத்தில் காரமாகவோ அல்லது சூடாகவோ அல்லது ஜில்லென்றோ கொடுத்தால் சில ஆரோக்கிய கேடு நம் உடலுக்கு வரும் .அது எந்த மாதிரியான கேடு அதை எப்படி தீர்ப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.காலை வேளையில் குளிர்பானங்கள் அருந்துவது  அமிலத்தன்மை, இரைப்பை பிரச்சனைகள், குமட்டல் போன்றவையும் ஏற்படுத்தும்.

cool drinks

2.. பச்சைக் காய்கறிகளை வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால்  வயிற்று வலி, அமிலத்தன்மை போன்றவற்றை உண்டாக்கும்.

3.காலையில் காரமான உணவை உண்பது நமக்கு அமிலத்தன்மைக்கும் வழிவகுக்கிறது.

4.வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால்  உங்களுக்கு அமிலத்தன்மை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

காலையில் எடுத்துக் கொள்ள வேண்டியவை

1.காலையில் வெதுவெதுப்பான தண்ணீர், லெமன் டீ அல்லது இஞ்சி டீ குடிக்கவும். இதனால் உங்க குடல் ஆரோக்கியமாய் இருக்கும்

2.உலர் பழங்கள் ஊறவைத்த கொட்டைகள் மற்றும் வெதுவெதுப்பான நீருடன் உங்கள் நாளைத் தொடங்கினால் உங்களின் உடலின் ஆரோக்கியத்துக்கு நாங்க கேரண்டி