மாத கணக்கில் வாட்டும் மல சிக்கலை நிமிடக்கணக்கில் சரி செய்யும் வழிகள்

 
toilet

மல சிக்கல் இல்லாமல் இருந்தாலே நம் உடலில் எந்த சிக்கலும் வராது .அந்த மல சிக்கல் நாளாக நாளாக மன சிக்கலில் கொண்டு போய் விடும் .மேலும் நம் உடலில் பல்வேறு நோய்களுக்கும் வித்திடும் .அதனால் காலை கடனை சரியாக போகல்லையென்றால் அது அந்த நாள் முழுவதும் உற்சாகமின்மையை ஏற்படுத்தி விடும்

மல சிக்கலை சரிசெய்ய நார் சத்துள்ள உணவு வகைகளை அதிகம்

சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

toilet

மல சிக்கலை சரிசெய்ய வெந்தய கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து

அரைத்து சட்னியாக சாப்பிட மலசிக்கல் தீர்ந்து ,வயிற்றில் இருக்கும் கழிவுகள் எல்லாம் வெளியேறி விடும்

மல சிக்கலை சரிசெய்ய கொடிப்பசலை கீரை, கொத்தமல்லி, சீரகம் இவற்றை

சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மலசிக்கல் குணமாகி வயிறு சுத்தமாகி ,நோய்கள் வராமல் காப்பாற்றும் .

மல சிக்கலை சரிசெய்ய கரிசலாங்கண்ணி கீரையுடன் 2 கடுக்காயை போட்டு

கஷாயமாக்கி குடித்தால் மலசிக்கல் குணமாகி ,உடல் புத்துணர்வுடன் இருக்கும் .

மல சிக்கலை சரிசெய்ய  மணலிக்கீரை, சோம்பு இரண்டையும் சம அளவு

எடுத்து அரைத்து சாப்பிட்டால் மலசிக்கல் தீர்ந்து ,வயிறு காலியாகி நன்றாக பசிக்கும்

மல சிக்கலை சரிசெய்ய  கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம்

இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டால்

காலையில் சிக்கல் இல்லாமல் மலம் கழித்து நிம்மதியாக அந்த நாளை கழிக்கலாம்