மல சிக்கல் இல்லாமல் வாழ இதையெல்லாம் செய்யுங்க போதும் .
பொதுவாக மலச்சிக்கலுக்கு உணவுமுறையில் மாற்றம் ஒரு காரணம்
மேலும் குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவதும் மலசிக்கலுக்கான காரணம்
சிலர் குறைந்த அளவு நீர் அருந்துவர் .இப்படி தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமையும் ஒரு காரணம்
மல சிக்கலை சரிசெய்ய என்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்
1. முதலில் வெந்தய கீரை எடுத்து கொண்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து
அரைத்து சட்னியாக சாப்பிட்டு வருவோருக்கு எந்த காலத்திலும் மலசிக்கல் வராது
2.அடுத்து நன்றாக மல ஜலம் கழிய கொடிப்பசலை கீரை, கொத்தமல்லி, சீரகம் இவற்றை
சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டு வருவோருக்கு இந்த பிரச்சினை இருக்காது .
3. அடுத்து கரிசலாங்கண்ணி கீரையுடன் 2 கடுக்காயை போட்டு
கஷாயமாக்கி குடித்தால் எந்த ஜென்மத்திலும் மலசிக்கல் வராது
4. அடுத்து மணலிக்கீரை, சோம்பு இரண்டையும் சம அளவு
எடுத்து கொள்ளவும் .அவை இரண்டையும் அரைத்து சாப்பிட்டால் மலசிக்கல் தீரும்.
5. கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம்
இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டால்
காலையில் சிக்கல் இல்லாமல் மலம் கழிக்கலாம்.


