மலச்சிக்கலை எந்த சிக்கலுமின்றி தீர்க்கும் வழிகள்

 
toilet

பொதுவாக ஒருவருக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு மலம் வெளியேறாவிட்டால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது . இதற்கு மல சிக்கலும் ஒரு காரணம் .மேலும் செரிமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை, உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதில் ஏற்படும் பிரச்னையே மலச்சிக்கலுக்கு காரணம். அது மட்டுமல்லாமல் இந்த மல சிக்கலுக்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தாதது, நார்ச்சத்து உணவை உட்கொள்ளாதது, உடற்பயிற்சியின்மை என்று பல காரணங்களை அடுக்கி கொண்டே நாம் போகலாம் .இந்த மல சிக்கலை எப்படி விரட்டலாம் என்று இப்பதிவில் பாக்கலாம்

toilet

1.மல சிக்கலை விரட்ட மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. .

2.வாழைப்பழத்தின் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடலின் செயல்திறனை மேம்படுத்தி உணவு கழிவுகளை வெளியேற்றும் செயல்பாட்டை செய்கிறது

3.மலசிக்கலை விரட்ட ஒரு நாளைக்கு 6-8 கிளாஸ் தண்ணீர் அருந்தி வந்தால் மலச்சிக்கல் பிரச்னை வராது.

4.மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் அருந்திவிட்டு சில எளிய உடற்பயிற்சிகள் செய்தாலே போதும் மலம் கழிக்க வேண்டிய உணர்வு வந்து மலசிக்கல்  ஓடி விடும் .

5.சிலர் மலச்சிக்கல் பிரச்னையால் அவதியுறும்போது  பேதி மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வது உண்டு. இது தவறானது.ஆரோக்கியமற்றது 

6.மேலும் பேதி மாத்திரை நம்மை அடிமைப்படுத்தி விடும் .இதை போடுவதற்கு பதில் இயற்கையான முறையில் சில வழிகளை பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னையே வராது.

7.மேலும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அன்னாசிப்பழ ஜூஸ் அருந்தலாம்.

8.மேலும் இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் உணவு செரிமானம் ஆன பிறகு சிரமமின்றி மலக்குடலுக்கு கொண்டு சேர்த்து வெளியேற்றும் தன்மை கொண்டது ..

9.மலசிக்கலை விரட்ட எலுமிச்சை பழம் உதவும் .இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும். எலுமிச்சை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

10.மலசிக்கலை விரட்ட பேரிக்காய் உதவும் .இதை சாப்பிடுவதும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி , மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கும்.