மல சிக்கலால் மன சிக்கலில் இருப்போருக்கு சிக்கலில்லாமல் மலம் வெளியே வர வழிகள்

 
toilet

காலையில் எழுந்ததும், கையில் செய்தித்தாளும் சுடச்சுட காபியுமாக அமர்ந்து, அன்றைய நாளைத் தொடங்கும் மக்களில் பெரும்பாலோர் சந்திக்கும் முக்கியப் பிரச்னை - மலச்சிக்கல். பரபரப்பான காலை வேளைகளில் மலம் கழிக்கப் பத்து நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. இதனால் முழுதாக மலம் கழிக்காமல், அவசர அவசரமாக முடித்து, குளித்துச் சாப்பிட்டு, அலுவலகம் சென்றுவிடுகின்றனர். டீ, காபி குடித்த பின்னர்,  மதிய உணவு உண்ட பின்னர் என அன்றைய நாள் முழுவதும் அவர்களுக்கு  மலம் கழிக்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.  இதனால் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் பல தவறுகள் செய்ய நேரிடும்.மாறிவிட்ட வாழ்க்கைமுறை, தவறான உணவு பழக்கம் காரணமாக மலச்சிக்கல் என்பது இன்றைக்கு பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக மாறிவிட்டது. சமீபத்தில்  நடத்திய ஆய்வில், இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் 14 சதவிகிதம் பேருக்கு நீண்டகால மலச்சிக்கல் பிரச்னை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியாமை, மூட் ஸ்விங், அசௌகரியமான நிலை என அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலர் திராட்சையை இரவில் தூங்கும் முன் சுடுநீரில் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை சாப்பிடுங்கள். மறக்காமல் நீரையும் குடியுங்கள். இதனால் அவற்றில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

மலச்சிக்கல் நீங்க சில வழிகள்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். முக்கியமாக அதில் சுவைக்காக தேன் கலந்து கொள்ளுங்கள். இப்படி குடிக்கும் போது அது தீவிர மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயில் இருந்தும் விடுவிக்கும்.

காலையில் எழுந்ததும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். பின் 15 நிமிடம் கழித்து காலை உணவை உட்கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது குடலியக்கம் சிறப்பாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

இரவு உணவு உட்கொண்ட பின் பேரிச்சம் பழத்தை சூடான பாலில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் தூங்குவதற்கு முன் பேரிச்சம் பழத்துடன் பாலைக் குடியுங்கள். இப்படி செய்யும் போது, பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராகி, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவும்.

சிறிது கற்றாழையை நன்கு காய வைத்து, பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை கற்றாழை பொடி மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள். இப்படி ஒரு தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாட்கள் குடித்து வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

அமரந்தஸ் கீரையின் இலைகளைக் கொண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 30-40 மிலி ஜூஸை எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து கலந்து, இரவில் தூங்கும் குடித்துவிட்டு தூங்குங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வர, மலச்சிக்கல் விரைவில் சரியாகும்.

1-2 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து, இரவில் படுக்கும் முன் தூங்க வேண்டும். இப்படி தொடர்ந்து 2-3 நாட்கள் இரவில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால் விளக்கெண்ணெயை உள்ளங்கையில் சிறிது விட்டு அப்படியே சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடியுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.