சளி தொல்லைக்கு இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கும்போது ,பக்க விளைவு தரும் மாத்திரை எதுக்கு ?

 
cold

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்;  தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். 


இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும்.  இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

home remedy for cough

இருமல்

சுக்கு:

சுக்குத் தண்ணீரை குடித்தால் சளித் தொல்லை முற்றிலும் நீங்கும்.

சுக்குத் தண்ணீர் செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சுடுத் தண்ணீரை வைக்கவும். பின்பு அதில் சுக்கு இரண்டு ஸ்பூன், கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.

இஞ்சி:

இஞ்சி சாறு சளித் தொல்லைக்கு ஒரு நல்ல நிவாரணியாகும்.

செய்முறை:

நெஞ்சுச்சளி அதிகமாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து அதனை சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் மூன்று நேரமும் குடித்து வந்தால் நெஞ்சுச்சளி அதிக விரைவில் குணமாகும்.

                                            (அல்லது)

ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி நீங்க வாய்ப்பு உள்ளது.

சீரகம்:

சீரகம் பயன்படுத்தி எவ்வாறு சளித் தொல்லையை சரி செய்யலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

செய்முறை:

சளி மட்டுமின்றி இருமல் பிரச்சணையும் இருந்தால் சீரகத்தை எடுத்து பொடியாக்கி அதில் சிறிது பழங்கற்கண்டு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு நேரம் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் குணமாகும்