கொரானா பிடிக்கும் காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமலிருக்க சில வழிகள்

 
child constipation tips

சளி, இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பொதுவாக, மூக்கிலிருந்து நீர் வடிவது, மூக்கடைப்பது போன்ற பிரச்னைகள் இருக்கலாம். காய்ச்சல் இருக்காது. இது, பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படும் அறிகுறிகள். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளால், இந்த அறிகுறிகளை சமாளிப்பது சிரமம். மூக்கு அடைப்பு ஏற்பட்டால், மூக்கின் வழியே சுவாசிப்பது சிரமம்; வாய் வழியாகவே சுவாசிக்க முடியும். தாய்ப்பால் குடிப்பது கூட இவர்களுக்கு சிரமம். இதை வெளியில் சொல்ல முடியாமல், அடிக்கடி அழுவதும் சகஜம்.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild
வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி சமயங்களில் நீர் போன்றோ, வெள்ளை நிற திரவமாகவோ வடியும். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, மூக்கடைப்புடன் சுவாசிக்கும் போது, மெல்லிய சத்தம் வந்தபடியே இருக்கும்.
வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி, இரவு நேரங்களில் லேசான இருமலை வரவழைக்கும். மல்லாந்து, தலை சற்றே உயரமாக இருக்கும்படி குழந்தையை படுக்க வைத்தால், மூக்கின் பின்பக்கம் சென்று, ஓரளவு சிரமமில்லாமல் சுவாசிக்க முடியும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் செல்லாமல் இருப்பது, வீட்டையும் சுற்றுப் புறத்தையும்
சுத்தமாக, துாசி, மாசு இல்லாமல் பராமரிப்பது, கரப்பான் பூச்சி, எலி, பூச்சிகள் இல்லாமல் சுற்றுப்புறத்தை பராமரிப்பது.
மேலும், செல்லப் பிராணிகளான பூனை, நாயிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவு, காய்கறி, பழங்கள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள குழந்தைகளை பழக்குவது, தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடியாடி விளையாடச் சொல்வது போன்றவை, எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

சளி இருக்கும் சமயங்களில், திரவ உணவுகளை அதிகமாக தர வேண்டும். இது, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும். உடல் வலியோ, அசவு கரியமாகவோ உணர்ந்தால், 'பாரசிட்டமால்' மாத்திரைகளை தரலாம். மூக்கடைப்பு ஏற்படும் நேரங்களில் சுத்தமான, மென்மையான ஈரத் துணி உதவியுடன், மூக்கின் உள்புறம் மெதுவாக சுத்தம் செய்யலாம், இதில் சமையல் உப்பு சிறிதளவு போடலாம்.

தேன்


ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வெதுவெதுப்பான நீரில், தேன் கலந்து குடிக்கச் கொடுப்பது, பொதுாக ஏற்படும் இருமலுக்கு மிகச் சிறிந்த நிவாரணம் தரும்.

காலநிலை மாறும் பொழுது சிலருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும். அந்த நேரத்தில் சளி, இருமல் மற்றும் தலைவலி ஏற்படுவது இயல்பு தான். அந்த சமயத்தில் சத்தான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குளிர் காலத்தில் உங்களுக்கு சளி பிடிக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

மழைக்காலங்களில் நாம் தண்ணீர் சரியாக அருந்துவது கிடையாது. சாியான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். இதனால் சளியை, தண்ணீா் வெளியேற்றிவிடும். சுடு தண்ணீரைக் குடித்தால், தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சளி பிடிப்பது போல அறிகுறிகள் தோன்றினால் பூண்டை பச்சையாகவே எடுத்துக்கொள்ளலாம். பூண்டு உடலில் உள்ள பாக்டீாியாக்கள் மற்றும் பிற நோய்க் கிருமிகளை விரட்டும்.

குடைமிளகாயை வேக வைத்து அதில் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம். குடை மிளகாயில் வைட்டமின் சி சத்து சளியை விரட்டும்.

கடுமையான நெஞ்சுசளியை நீக்கும் பூண்டு பால்

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் கற்பூரவள்ளியை அப்படியே சாப்பிடலாம். இதோடு துளசியையும் சேர்த்து சாப்பிடலாம்.