சளியும் இருமலும் வந்துவிட்டால் இதை செய்யுங்க போதும்
சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு நினைக்கமுடியாத அளவிற்கு இருக்கும்.
அதுக்கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான்.
சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும்.
பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகாக இருக்கும்.
சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம்.
1.சளி இருமலுடன் சிலருக்கு தொண்டைவலி இருக்கும் .இது வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
2.இப்படி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.
3.அடுத்து சளி இருமலை குறைக்க ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும்.
4.மேற்சொன்ன முறையில் சளியை விரட்ட இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
5.அடுத்து சளி இருமலை இயற்கையான முறையில் விரட்ட நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும்.
6.அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும்.
7. இந்த பொரித்த பூண்டை சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
8.பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.
9.அடுத்து சளி இருமலை விரட்ட சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும்.
10 இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் மற்றும் சளி குறையும்.

