காபி தூளுடன் பால் சேர்த்து முகத்தில் பூசினால் முகத்தில் ஏற்படும் மாற்றம்

 
milk

சிலருக்கு காலையில் எழுந்ததும் காப்பி குடிக்கவில்லையென்றால் அன்றைய பொழுதே விடியாது .இன்னும் சிலருக்கு தலைவலியே வந்து விடும் ,அந்தளவுக்கு காப்பி சிலரின் வாழ்வில் இன்றியமையாத ஒரு பானமாக மாறி விட்டது எனலாம் .இந்த காபி நாம் குடிப்பதற்கு மட்டுமில்லை ,நம் முகத்தை பொலிவாக மாற்றவும் பயன் படும் என்று தெரிந்தால் மிக ஆச்சரியப்படுவீர்கள் .ஆம் அந்த காப்பி தூள் மூலம் நம் முகத்தை எப்படி பொலிவாக மாற்றலாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்

coffee

1.மென்மையான சருமத்தைப் பெற விரும்பினால் காபி தூள் மற்றும் பால்  இரண்டையும் கலந்து கொள்ளவும் .பின்னர் அதை பேஸ்ட் போல செய்து கொள்ளவும் .பின்னர் அதை முகத்தில் தடவவும். அதன் பின்னர் உங்கள் முகத்தில் 10-15 நிமிடங்கள் காய வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.இபபோது முகம் பள பள ப்பாக இருக்கும்

2.ஒரு தேக்கரண்டி காபி தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் எடுத்து கொள்ளவும் .பின்னர் இந்த பொருளுடன்  ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து பேஸ்டு போல குழைத்து கொள்ளவும் ,பின்னர் இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் காய விட்டால் முகம் பிரகாசமாய் இருக்கும் 

3.பின்னர் முகத்தில் உள்ள பேஸ்ட்டை அகற்ற, மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவவும்,

இப்போது உங்கள் முகசருமம் பளபளப்பாக இருக்கும். இது சருமத்தில் உள்ள மந்தமான தன்மையை நீக்கி கரும்புள்ளிகளை குறைத்து ஆரோக்கியம் கொடுக்கிறது .