இருவேளை தேங்காய் பால் குடிச்சா எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

 
coconut oil

பொதுவாக சாப்பிட்ட உணவு செமித்து ,நன்றாக மலம் கழிந்தாலே நம் உடலில் பல நோய்கள் இருக்காது .ஆனால் பலருக்கு மலம் கழித்தலில் பிரச்சினை ஏற்பட்டு அதுவே நாளடைவில் மூலம் அல்லது பவுத்திர நோயாக உருவெடுத்து அவர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது .இந்த மூல நோய் என்பது ஆசன வாயில் அரிப்பு ,வலி ,ரத்தம் கசிவு ,வீக்கம் ,அடைப்பு இருப்பது போன்ற எரிச்சல் உணர்வு என்று பல அறிகுறிகளை கொடுத்து மலம் கழிக்க நரக வேதனையை அனுபவிப்பர் .எனவே இந்த மூல நோயை எப்படி செலவில்லாமல் வீட்டு வைத்தியத்தால் சரி செய்யலாம் என்று பார்ப்போம்

coconut

. உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 50000 – 100000 மக்கள் மூலம் என்ற பவுத்திர  நோயால் பாதிப்படைகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

இந்த பௌத்திரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் டாய்லெட் போகும்போது டார்ச்சர் அனுபவிப்பர் .அவர்கள் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பயனைப் பெறலாம். இதனோடு ஆகாயத் தாமரை இலையை அரைத்து அந்த ஆசன வாயில் வைத்துக் கட்டி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

அதிகப்படியான உடல் சூடே பௌத்திரம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது என்பதால் உடற் சூட்டைத் தணிக்க எண்ணெய் குளியல், உணவில் நீர்க் காய்கறிகளை (தக்காளி, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி) அதிகளவு எடுத்துக் கொண்டால் இந்த மூல நோயை ஒழித்து நிம்மதி பெரு மூச்சு விடலாம்