தினமும் இருவேளை தேங்காய் பால் சாப்பிடுவது எந்த நோயாளிக்கு நல்லது தெரியுமா ?

 
coconut

பெயரிலேயே சிக்கலை வைத்திருக்கும் மலச்சிக்கல்தான் பல நோய்களுக்கு மூல காரணம் ,இது பவுத்திரம் என்ற மூல நோய்க்கும் முதல் காரணமாகிறது .எனவே நாம் இந்த பவுத்திரம் வராமல் தடுக்க வேண்டுமென்றால் மலச்சிக்கலை தடுக்க வேண்டும் ,இதற்கு நாம் தினம் காலை 6முதல் 7 மணிக்குள் காலை கடனை கழிக்க முயற்சிக்க வேண்டும் ,இந்த நேரம்தான் நம் மலக்குடல் வேலை செய்யும் நேரம் ,இதற்கு காலையில் 2க்ளாஸ் தண்ணீர் குடித்து விட்டு கொஞ்சம் வீட்டிலே நடக்கலாம் கூடவே குனிந்து கால் கட்டை விரலை தொட வேண்டும் ,மேலும் கழுத்தை இருபக்கமும் சாய்த்து பயிற்சி செய்தாலும் மலம் சிக்கலின்றி வெளியேறும் ,மேலும் இந்த பவுத்திரத்துக்கு சில இயற்கை வைத்தியத்தை கொடுத்துள்ளோம் அதை படித்து பயன் பெறுங்கள்

coconut oil

1.பௌத்திரத்தால் பாதிக்கப்பட்டு டாய்லெட் வராமல் சிலர் கஷ்டப்படுவார் . அவர்கள் தினமும் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பயனைப் பெறலாம்.

2.இதனோடு ஆகாயத் தாமரை இலையை அரைத்து அந்த பவுத்திரம் உள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் அந்த ரணமெல்லாம் குணமாகும்

3.அதிகப்படியான உடல் சூடே பௌத்திரம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.அதனால் உடல் சூடை தணிக்க வேண்டும் 

4. உடற் சூட்டைத் தணிக்க எண்ணெய் குளியல், உணவில் நீர்க் காய்கறிகளை (தக்காளி, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி) அதிகளவு எடுத்துக் கொண்டு வந்தால் பவுத்திரம் குணமாகும்