தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து தேச்சா ,எந்த நோய் ஓடி போகும் தெரியுமா ?

 
oil

பொதுவாக   ஒரு மனிதனின் வாழ்நாளில் பலமுறை சளி தொல்லை இருக்க வாய்ப்புள்ளது .அப்போது சளி பிடிக்கும் போது அவர்களின் நெஞ்சில் சளி கட்டி கொண்டு அவஸ்த்தை கொடுக்கும் .சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த சளி தொல்லையில் சிக்கி கொண்டு மீள முடியாமல் பல ஆங்கில வைத்தியம் செய்து கொண்டு காலத்தை ஒட்டி கொண்டிருப்பர் .இன்னும் பலர் அந்த மருந்தால் பல பக்க விளைவுகளை சந்தித்து கொண்டிருப்பர் .இதற்கு சரியான தீர்வு சித்த மருத்துவத்தில்தான் உள்ளது  .

camphor

சிலருக்கு இந்த சளியால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டிருக்கும் .அவர்களின் நுரையீரல் சளியை போக்க தேங்காய் எண்ணையில்  சிறிய துண்டு கற்பூரத்தை போட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். அந்த கலவையை நெஞ்சில் தடவி வர மார்பு சளி கரைந்து வெளியேறி குணமாகும். மூச்சு விடுதல் எளிதாகும். நெஞ்சு சளி பொருத்தவரை சிறிது குணமானவுடன் விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து வைத்தியம் செய்தால் மட்டும் முழுவதுமாக அது நுரையீரலை விட்டு வெளியேறி நிவாரணம் கிடைக்கும் ,.இல்லையெனில் இந்த சளி தொல்லை திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கும் .

இந்த சளிக்கு இன்னொரு வைத்தியமாக வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து நன்றாக கலக்கி அதை குடித்து வந்தால் நுரையீரல் சளி கரையும்.

இந்த கொடுமையான சளிக்கு மற்றொரு சிகிச்சையாக மஞ்சள் மற்றும் பசும்பால் கலவை மார்பு சளி நீக்கும் அருமருந்து ஆகும். குழந்தைகளுக்கு நெஞ்சு சளி பிடித்திருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலுடன், ஒரு சிட்டிகை நாட்டு மஞ்சள் பொடி கலந்து கொடுத்து வர நெஞ்சு சளி கரைந்து பூரண குணமாகி நல்ல நிவாரணம் உடனே கிடைக்கும்