கிராம்புப் பொடியை , தேனில் குழைத்து சாப்பிட்டால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
honey

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் .இந்த கிராம்பு மூலம் நாம் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

health tips of cloves in hot water

1.கிராம்பு பல் வலியை போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி ஆகும்.

2.அடுத்து கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.

3.கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர நிவாரணம்  கிடைக்கும்.

4.கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும்.

5.இந்த கிராம்பை இப்படி பூசுவதால்  தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

6.மேலும் கிராம்பு உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம்.

7.மேலும் கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

8.கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

9. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட்டு வர ஆரோக்கியம் கிடைக்கும் 

10.இதன் மூலம் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.