"கொழுப்பு ஜாஸ்தி"ன்னு எந்த லேப் ரிப்போர்ட்டும் சொல்லாமல் காக்கும் உணவுகள்

 
cholerstarl cholerstarl

உடலில் உள்ள அதிகப்படியான  கொழுப்பை குறைக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்..

பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும்.காலங்காலமாக பூண்டை உணவில் சேர்த்து வருகிறோம். பூண்டில் அலிசின் என்னும் ஆன்டி ஆக்சி டண்ட் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவுகிறது. ரத்தகுழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்து இதயத்துக்குள் கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது. உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுவதால் இதய நோய் உண்டாகும் அபாயத்தைக் குறைகிறது.

தினமும் காலையில் இரண்டு பல் பூண்டை தோல் உரித்து பச்சையாக சாப்பிடலாம். வெறும் பூண்டு அசிடிட்டி உண்டாக்கும் என்பவர்கள் பூண்டுடன் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அரைத்து தூள் செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சரியாகும்.

cholestral

வெந்தயம் :அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், வெந்தயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் வெந்தயம் விதைகளை சாப்பிடுவதில் மூலம் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.ஒரு ஸ்பூன் வெந்தயம் விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் (LDL) கரையும்.

ஓட்ஸ்

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

ஓட்ஸ்  பீட்டா-குளுக்கன்  என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்தை கொண்டுள்ளது. இவை இரத்தத்தில் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்க  உதவுகிறது, தினசரி  3 கிராம்  பீட்டா-குளுக்கன் (ஓட்ஸில் உள்ளது) உட்கொள்வது மொத்த கொழுப்பைக் குறைத்து எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டது. கெட்ட கொழுப்பை குறைக்க தினமும் உங்கள் காலை சிற்றுண்டியில் ஓட்ஸ் சேர்த்து கொள்ளுங்கள்

பிஸ்தா

அனைத்து நட்ஸ்களும் இதயத்திற்கு நல்லது, குறிப்பாக பிஸ்தா பருப்புகள் உடல் ஆரோக்கியததிற்கு மிகவும் நல்லது. இவை  உங்கள் உடல் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். பிஸ்தா பருப்புகளில்  பைட்டோஸ்டெரால் என்னும் இயற்கை தாவர கலவைகள் உள்ளது, இவை உடல்  அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சுவதைதடுக்கின்றன.

பாதாம் மற்றும் வால்நட் பருப்புகள்

பாதாம் மற்றும் வால்நட் பருப்புகளில்  பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்(நல்ல கொழுப்புகள்) அதிகம் உள்ளது, மேலும் வால்நட்ஸில் அதிக ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது,  இது  இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நட்ஸ்கள் நம் குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் பைட்டோஸ்டெரால்ஸையும் கொண்டிருக்கின்றன. தினமும்  2-3 வால்நட் கொட்டைகளை சாப்பிடுவது அல்லது ஒரு கையளவு பாதாம் நம் உடலில் கெட்ட கொழுப்பான எல்.டி.எல் (LDL) கொழுப்பை குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றது.

வெண்ணெய்பழம்

வெண்ணெய் பழங்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, தினமும் ஒரு  வெண்ணெய் பழத்தை சாப்பிடுவது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவும் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது  என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது..

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ், பயறு போன்ற தாவர உணவுகளில் நல்ல கொழுப்புகள் (HDL) அதிகம் உள்ளது. மேலும் இவைகளில் உடலுக்கு தேவையான புரதசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்க்கள் உள்ளது. இந்த உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை  குறைக்கும்.

பழங்கள்

பழங்களில் ஊட்டச்சத்துக்கள், 

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது, இது கெட்ட கொழுப்பை 10% வரை குறைக்கிறது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி  ஆப்பிள்களில்  இந்த நார்சத்து காணப்படுகிறது. அவை எச்.டி.எல் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதன் மூலம் நம் உடலில் எல்.டி.எல்  கெட்டகொழுப்பை குறைக்கிறது.

எலுமிச்சை

எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடிப்பது உடலில் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை குறைய உதவுகிறது. எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் கொழுப்பை கரைப்பதோடு உடலில் இருந்து நச்சு கழிவுகளை வெளியேற்றும்.

மீன்கள்

சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் பிற கொழுப்பு மீன்களில்  ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்பை அதிகரிக்கும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது நல்ல கொழுப்பை (HDL)  அதிகரிக்கும், ஏனெனில் இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒரு வகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பாகும். மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலம் இரத்த ஓட்டத்தில் ட்ரைகிளிசரைடு அளவை 25-30 சதவீதம் வரை குறைக்கிறது. மீன்களில்  பெப்டைட்களும் உள்ளன, அவை நம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சோயா உணவுகள்

சோயா உணவுகள் மொத்த கொழுப்பு மற்றும் எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) அளவைக் குறைக்கின்றன, சோயா பால் அல்லது சோயாபீன்ஸ் சாப்பிடுவது கொழுப்பின் அளவில் ஐந்து சதவீதம் வரை குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.