குழந்தையின் லூஸ் மோஷனை நிறுத்த யூஸ் புல் வழி

 
child foods upto age six

வயிற்றுப்போக்கு… இதைச் சொல்லாத தாய்மார்கள் இல்லை எனலாம். ஆனால், பிறந்த குழந்தைகளின் மலம் வெளியேற்றத்தைக்கூட சில தாய்மார்கள் வயிற்றுப்போக்கு என நினைத்துக் கொள்கிறார்கள். வயிற்றுப்போக்கு ஏன் வருகிறது? குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? பாதுகாப்பு முறைகள் பற்றிப் பார்க்கலாம். குழந்தைகள் பச்சை, கருப்பு, மஞ்சள், பழுப்பு, சிவப்பு நிறங்களில் கூட மலம் கழிப்பார்கள். இதைக் கடந்து வராத குழந்தைகள் கிடையாது.

 இது வளரும் நாடுகளில் மரணத்திற்கான பொதுவாக காரணமாகவும் உலகளவில் குழந்தை இறப்பிற்கு இரண்டாவது மிகப்பெரும் காரணமாகவும் அமைந்துள்ளது. வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பினால் நீர்ப்போக்கு மற்றும் மின் பகுபொருள் சமநிலை இழப்பு நேர்கின்றன. ஒரு  ஆண்டில் வயிற்றுப்போக்கினால் இறந்த ஐந்து வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாகவும் ஐந்து வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாகவும் இருக்கிறது. இதற்கான தீர்வாக வாய்வழி கனிமக் கரைசலும் மற்றும் துத்தநாக உப்புக்களும் கொடுக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் 50 மில்லியன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

வயிற்றுபோக்கு வந்தாலே நம்மை வாட்டி வதைத்து விடும்.பெரியவர்களுக்கே அதை தாங்கும் சக்தி குறைவுதான்.குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு வந்தால் துடித்து போய்விடுவார்கள்.உடலில் உள்ள நீர்சத்து வெளியேறி குழந்தைகளை சோர்வடைய செய்துவிடும்.எடை உடனடியாக குறைந்ததுபோல் தோன்றும்.பொதுவாக வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தாலோ, இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.குழந்தைகளுக்கு என்றால் ஒரு நாளைக்கு மேல் வயிற்றுப்போக்கு நீடித்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.

child constipation tips

வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்

தேவையானவை:

மோர்

மஞ்சள்

தண்ணீர் (தேவையானளவு)

செய்முறை:

1.மோர் தயாரிக்க 2 டீ.ஸ்பூன் தயிருடன் 7 டீ.ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

2.தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

3.பானை சூடாக்கி மோரை சேர்க்கவும்.

4.மோரை லேசாக சூடாக்கவும்.கொதிக்க வைக்க கூடாது.தொடுவதற்கு வெது வெதுப்பாக இருந்தால் போதுமானது.

5.அடுப்பை அணைக்கவும். மோருடன் இம்மியளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

6.நன்றாக கலக்கவும்.

7.முதல் முறை 3 டீ.ஸ்பூன் மோர் பருக வேண்டும்.4 மணி நேரம் கழித்து திரும்பவும் 3 டீ.ஸ்பூன் மோர் பருக வேண்டும்.

குறிப்பு: 4 மணி நேரத்திற்கு மேலாக மோரை வைத்திருக்க கூடாது.திரும்பவும் பிரெஷாக தயாரித்து பருக வேண்டும்.