உங்க குழந்தையை பசியில் அழ வைக்கும் இந்த பொருட்கள்

 
child

பொதுவாக  குழந்தைகள் சாப்பிடுவதில் முரண்டு பிடிப்பார்கள் ,அல்லது விளையாட்டு செய்வார்கள், கொடுக்கும் உணவை சாப்பிடாமல் அடம் செய்வார்கள் இப்படி உள்ள குழந்தைக்கு நாம் வீட்டிலேயே ஒரு கஷாயம் தயாரித்து கொடுத்தால் ,அவர்கள் நன்றாக பசியெடுத்து சாப்பிடுவார்கள்

அதை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம். 

child eat

1.முதலில் சீரகம்- சிறிதளவும் மிளகு ஐந்தும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்

2.அடுத்து ஏலம்- ஐந்து எண்ணிக்கையும் ,இஞ்சி ஒரு துண்டு அளவுக்கு எடுத்து வைத்து கொள்ளுங்கள்

3.அடுத்து ஓமம்- சிறிதளவும் ,தண்ணீர் கொஞ்சமும் ,தேன் கொஞ்சமும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்

4.இனி இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் ,முதலில் ஒரு உரலில் சீரகம், மிளகு, ஏலம், இஞ்சி மற்றும் ஓமம் சேர்த்து இடித்து எடுத்து கொள்ளுங்கள்

5.பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும் ,அதன் பின்னர் , இடித்த பொருட்களை அதில் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளுங்கள் .

6.பின் இந்த கஷாயத்தை வடிக்கட்டி, தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வர நன்றாக பசியெடுக்கும்

7.மேலும் இதனை 6 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

8.இதை செய்து குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்தால் உடனே பசியெடுத்து சாப்பிடுவார்கள்