குழந்தையின் காய்ச்சலை மாத்திரையின்றி விரட்டும் குறுக்கு வழிகள்

 
fever

குழந்தைக்கு  காய்ச்சல் அதிகமாக இருந்தால் மருந்து மாத்திரையின்றி வீட்டு வைத்தியத்திலேயே சரி செய்யும் வழிகளை பாக்கலாம் .

fever

காய்ச்சல் கண்ட குழந்தை தூங்கும் போது, ஈரமான துணியை குழந்தையின் நெற்றியில் சுத்தி வைக்கவும். இந்த வழி காய்ச்சல் கண்ட குழந்தையின்  அதிக காய்ச்சலை குறைக்க உதவும் முன்னோர்கள் சொன்ன வைத்தியமாகும். இப்படி செய்வதன் மூலம் குழந்தையின் உடல்  சூடு குறைகிறது.

காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு அடர்த்தியான உடைகளை உபயோகிக்க கூடாது. மிகவும் லேசான காட்டன் துணிகளை பயன்படுத்தினால் ஜுரம் உடனே குறைந்து விடும்

காய்ச்சல் கண்ட குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்தும் வெங்காயம் சிறந்த பாட்டி வைத்தியமாகும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, குழந்தையின் காலின் பாதத்தில் தேய்த்து வந்தால்  காய்ச்சல் உடனே குறையும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டு சென்றனர் .

காய்ச்சல் கண்ட  குழந்தையை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வைக்க வேண்டும்.சூடான தண்ணீரோ அல்லது பச்சை தண்ணீரோ கூடாது

காய்ச்சலின் போது நீரிழப்பு ஏற்படும். அதை தவிர்க்க அதாய்ப்பால், இளநீர், ஜூஸ் அல்லது தண்ணீர் போதுமான அளவு கொடுத்து வந்தால் மாத்திரையின்றியே ஜுரத்தை குணப்படுத்தலாம்