இந்த இருமல் சீசனில் குழந்தைகளை காக்க அருமையான வைத்திய முறைகள்

 
tips for baby sleeping

குழந்தைகளின் இருமலைக் குறைக்க அல்லது தவிர்க்க, இருமல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துப் பின்னரே சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகளில் 50% பேருக்கு  சிகிச்சை தராமலே 10 நாட்களிலும் 90% பேருக்கு  25 நாட்களிலும் இருமல் நின்றுவிடுகிறது.அமெரிக்கக் குழந்தையியல் கல்விக்கழகம், இருமல் மருந்தின் பயன்பாடு இருமலை நிறுத்துவதற்கான சான்றுகள் இல்லை எனக் கூறுகிறது. 
சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

குழந்தைகளுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் இந்த முறைகளை பின்பற்றலாம்…

1. லேசான ஜலதோஷம் (மூக்கில் இருந்து நீர் வடிதல்)

2. லேசான இருமல்

3. தொண்டை வலி

4. மூக்கடைப்பு

குழந்தைகளின் சளி, இருமலை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் :

1. கற்பூரம் / சூடம்

தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.

2. யூகலிப்டஸ் ஆயில்

குழந்தையை யூகலிப்டஸ் ஆயிலை சுவாசிக்க வையுங்கள். மேலும் குழந்தை படுக்கும் இடத்தை சுற்றி யூகலிப்டஸ் ஆயிலை சிறிது தெளிக்கலாம்…

3. மஞ்சள்

விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம்…

1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடிக்கும் பாலுடன் இம்மியளவு  டர்மெரிக் மில்க் மசாலாவை கலந்து கொடுக்கலாம்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் சளியை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் சளி தொல்லையில் இருந்து விரைவில் குணமடைய வழி செய்கிறது

4. சாய்வான முறையில் தூங்க வைத்தல்

சளி தொந்தரவால் உங்கள் குழந்தை தூங்க சிரமப்படுகிறதா? தலையணையை குழந்தையின் முதுகுப்புறம் வைத்து சற்று சாய்வான முறையில் குழந்தையை தூங்க வையுங்கள். இதனால் மூக்கில் இருந்து சளி தொந்தரவு வராமல் குழந்தை நிம்மதியாக தூங்கும்.

5. பூண்டு

2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

6. இஞ்சி

சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

7. சிக்கன் சூப்

சளித் தொந்தரவை போக்க சிக்கன் சூப்பை 8 மாதங்களிலிருந்து குழந்தைக்கு தரலாம்.

8. துளசி இலைகள்

துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம். தண்ணீரில் இதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இதனை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தர வேண்டும்.

9. தேன்

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அரை டீஸ்பூன் தேனை எடுத்து அதை பாலில் கலந்து நாளொன்றுக்கு இரு முறை தரலாம்…

10. ஓமம்

ஓமத்தை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதனை குழந்தையின் மூக்கருகே கொண்டு சென்று சுவாசிக்க வையுங்கள். அல்லது குழந்தையின் மூக்கருகே இதனை வைத்து விடலாம்…