நெஞ்சு வலியை அலட்சியம் செய்பவர்களை அட்டாக் செய்யும் நோய்கள்

 
heart pain

நெஞ்சில் வலி  ஏற்பட்டாலே சிலர் அதை மாரடைப்பாக இருக்குமோ என்று அஞ்சி ஸ்கேன் ,ஈசிஜி என்று அதிகமாக செலவு செய்ய தொடங்கி விடுகின்றனர் .நெஞ்சு வலியையும் இதய வலியையும் பிரித்து பார்க்க தெரிந்து கொண்டாலே அச்சத்தை தவிர்க்கலாம் .மேலும் சிலருக்கு இரவில் வாயு பதார்த்தங்களை உண்டால் மறுநாள் காலையில் நெஞ்சில் வலி ஏற்படும் .இது வாயு கோளாறால் ஏற்படும் வலி என நாம் புரிந்து கொண்டு இரவில் கிழங்கு வகைகளை சாப்பிடுவதை  தவிர்க்க வேண்டும் .இந்த பதிவில் நெஞ்சில் வலி ஏற்பட எந்த காரணம் என்பதை பற்றி பார்க்கலாம் 

chest

இந்த காரணங்களால் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படுகிறது:

அமிலத்தன்மை:

பலருக்கு அசிடிட்டி காரணமாகவும் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படலாம். ஏனெனில் உணவுக் குழாயில் அமிலம் வரும்போது,அவர்களின்  நெஞ்சின் நடுவில் வலி ஏற்படும். இந்த வலி அடிவயிற்றின் மேல் பகுதியிலும் ஏற்படுகிறது. இதில் உங்களுக்கு மார்பின் நடுவில் கடுமையான வலி ஏற்படலாம். ஆகையால் வாயுப் பிரச்சனையை கண்டிப்பாக லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும் இரவில் சாப்பிட்டதும் உறங்க சென்றாலும் மறுநாள் காலையில் வாய்வு வலி ஏற்படும் .அதனால் சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து உறங்க செல்லலாம்

அடுத்து நெஞ்சில் வலி ஏற்பட காரணம் ஸ்டெர்னமில் எலும்பு முறிவு ஏற்பட்டால், மார்பின் நடுவில் வலி உணரப்படுகிறது. இந்த காயம் விளையாடும் போது அல்லது உடல் செயல்பாடுகளின் போது ஏற்படலாம்.

ஒரு நபர் மார்பின் நடுப்பகுதியில் வலியை உணர்ந்தால், அது, இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயின் காரணமாகவும் இருக்கலாம். இந்த பிரச்சனை பெரும்பாலும் அதிக எடை கொண்டவர்களிடம் காணப்படுகிறது. மேலும் புகை பிடிப்போர் மற்றும் மது அருந்துவோருக்கு அடிக்கடி நெஞ்சில் வலி தோன்றும் .அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டால் அந்த வலிகள் காணாமல் போகும்