பெண்களே !கர்ப்பப்பை வாய் கேன்சரை தடுக்கும் வழியை தெரிஞ்சிக்கோங்க

 
cancer

கர்ப்பப்பை கேன்சரால் நம் நாட்டில் ஒரு வருடத்திற்கு 1.2 லட்சம் பெண்கள் பாதிப்படைகின்றனர் .ஒவ்வொரு ஆண்டும் இதனால் இறப்பு விகிதம் 50  சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது .பெரும்பாலும் 44 வயதுக்குட்பட்ட பெண்கள்தான் இந்த நோயால் அதிகம் பாதிப்படுகின்றனர் ,இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது என்பதால் நோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது மற்றும் முதன்மையான அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம்.

cancer

 ஆணிடமிருந்து பெண்ணுக்கு வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக புற்றுநோய் ஏற்படாது. வைரஸ் தொற்று புற்றுநோயாக மாற குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்.

பாதிப்பு தீவிரமான நிலையில் தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

மாதவிலக்கின் போது ரத்தத்துடன் துர்நாற்றமும் வீசலாம். 

பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது

பெண்கள் மிக இளம் வயதில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது

வேறு பாலியல் நோய் தொற்று இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

புகைப்பழக்கம், போதை பழக்கம்  போன்றவை இந்த நோய் உண்டாக காரணம் 

 இந்த நோயை தடுக்க நினைக்கும் மகளிர், மகப்பேறு மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

பெண்கள் 21 வயதைக் கடந்துவிட்டால் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து பாப்ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டும்.

மிகவும் பாதுகாப்பான முறையில் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்