உங்கள் எலும்புகளில் கால்சியத்தை கரைத்து விடும் உணவுகள் .

 
bone

ஒரு மனிதன் நடக்கவும் ,ஓடவும் ,ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இயங்கவும் உடலின் எலும்புகள் முக்கிய பணியாற்றுகிறது .இந்த எலும்புகள் நாளடைவில் வயது ஆக ஆக தேய்ந்து கொண்டே வருகிறது .இந்நிலையில் அந்த எலும்புகளை பாராமரிக்கவும் ,அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கால்சியம் சத்துக்கள் அவசியம் .எனவே அந்த எலும்புகளை பாதிக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

bone

சோடா மற்றும் குளிர்பானங்கள்

நாம் அன்றாடம் குடிக்கும் பெரும்பாலான குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்பட்டிருக்கும்.

இது எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை கரைத்து ,உங்கள் எலும்பின் வலிமையை  விரைவில் குறைந்து,நாளடைவில் பாதிப்படைய செய்து விடும் .

விலங்குகளின் புரதச்சத்து

 நாம் உண்ணும் அதிகப்படியான விலங்கு புரதச்சத்துக்கள் உங்கள் சிறுநீரில் கால்சியத்தை வெளியேற்றி,எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் .

புகையிலை மற்றும் புகைப் பிடித்தல்

சிலருக்கு இருக்கும் தீய பழக்கமான புகை பிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் போன்றவற்றால் கால்சியம் உடலில் சேராமல் எலும்புகளை வீணாக்கிவிடும்

அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு

நீங்கள் அன்றாடம் உண்ணும் உங்கள் உணவில் அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் இந்த இரண்டின் அதிகப்படியான நுகர்வு கால்சியம் ஊட்டச் சத்தை உடலில் விரைவாக கரைத்து எலும்பை பாதிக்கும் .

காஃபின்

நீங்கள் அன்றாடம் குடிக்கும்  காபி போன்ற பானங்களில் உள்ள காஃபின் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றி எலும்பை பாதிக்கும்

எனவே இந்த பானங்களை அதிகமாகக் குடிக்காமல் இருப்பது மிக மிக நல்லது.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

 ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது இரவில் அதிக நேரம் வேலை செய்வது.

போன்ற காரணங்களால் உடல் எடை கூடும் அது எலும்பை பலவீனமாக்கி ஆரோக்யத்தை தடுக்கும்